×

நச்சுனு 4 கேள்வி… வரி வாங்கவில்லை என்றால் எப்படி அரசாங்கத்தை நடத்துவது? ஆயிரம் விளக்கு தொகுதி பாஜ வேட்பாளர் நடிகை குஷ்பு

1. அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?அதிமுக தேர்தல் அறிக்கையில் அவர்களுடைய திட்டங்கள் முழுமையாக இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, 6 காஸ் சிலிண்டர் இலவசம், வாசிங் மெஷின் இலவசமாக கொடுக்கப்போவதாக கூறியிருக்கிறார்கள். மக்களுக்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்வதாக இருந்தது. கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்யும் எதுவாக இருந்தாலும் அது நல்ல திட்டம்தான். இலவசத்தை தவிர்த்து பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.2. திமுக தேர்தல் அறிக்கையின் நகல் போன்று அதிமுக தேர்தல் அறிக்கை உள்ளதே? திமுக தேர்தல் அறிக்கையில் கலைஞர் பெயரில் உணவகம் தொடங்கப்போவதாக கூறியிருக்கிறார்கள். அப்படி பார்க்கும் போது ஏற்கனவே அம்மா உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் வரியில் 5 ரூபாய், 4 ரூபாய் குறைத்துவிடுவோம் என்கிறார்கள். வரி வாங்கவில்லை என்றால் எப்படி அரசாங்கத்தை நடத்த முடியும்? டீசல், பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் துன்புறுகிறார்கள் என பாஜவே தெரிவித்துள்ளது. எனவே, அதை நிச்சயமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் கூறியிருக்கிறார். 3. சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த முடியாத அதிமுக அரசு வருடத்திற்கு 6 சிலிண்டர்களை எப்படி இலவசமாக வழங்க முடியும்? கண்டிப்பாக விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விலையை குறைக்க முடியாது என்று நாங்கள் சொல்லவில்லை. இது சாத்தியமானது தான். 4. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்துவிட்டு தேர்தல் அறிக்கையில் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? இதற்கு நான் பதில் சொல்ல முடியாது. மேலிடத்தில் இருப்பவர்கள்தான் பதில் சொல்வார்கள்….

The post நச்சுனு 4 கேள்வி… வரி வாங்கவில்லை என்றால் எப்படி அரசாங்கத்தை நடத்துவது? ஆயிரம் விளக்கு தொகுதி பாஜ வேட்பாளர் நடிகை குஷ்பு appeared first on Dinakaran.

Tags : Nachunu ,Actress ,Khushbu ,BJP ,Aayur Lantum ,AIADMK ,Khushpu ,Dinakaran ,
× RELATED அரண்மனை 4 – திரை விமர்சனம்